×

மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் தீ விபத்து: 4 வாக்குப்பதிவு இயந்திரங்களும் தீயில் எரிந்து சேதம்

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சென்ற பேருந்து கோலா கிராமம் அருகே தீ விபத்தில் சிக்கியது. முல்தாய்க்கு செல்லும் வழியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் திடீரென தீ பிடித்தது.

நாட்டின் 18வது மக்களவையை தேர்வு செய்யும் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 7) நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 9 தொகுதிகளும் அடங்கும். இம்மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றை பத்திரமாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் பெடுல் மக்களவைத் தொகுதியில் சைகேடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிஸ்னூர், பவுனி கவுலா கிராமங்களை ஒட்டி பேருந்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. அப்போது பேருந்தில் எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ஏற்கனவே பேதுல் தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்ற நிலையில் வாக்கு எந்திரங்களில் தீப்பற்றியது. பேருந்தில் தீ பிடித்தவுடன் தேர்தல் அதிகாரிகள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 4 வாக்குப்பதிவு இயந்திரங்களும் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீப்பிடித்த பேருந்தில் இருந்து கண்ணாடியை உடைத்து வாக்குச்சாவடி ஊழியர்கள் காயமின்றி உயிர்தப்பினர்

* பேதுல் ஆட்சியர் விளக்கம்

வாக்குப்பதிவு எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது பற்றி ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளோம் என்று பேதுல் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வந்ததும் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேதுல் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். பேருந்தில் வந்த தேர்தல் அலுவலர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று பேதுல் ஆட்சியர் பேட்டி அளித்துள்ளார். தீயினால் நான்கு வாக்குச் சாவடிகள், வாக்குச் சாவடி எண்கள் 275, 276, 277, 278, 279 மற்றும் 280 ஆகியவற்றின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்தன. கலவரமான பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்த முடிவை தேர்தல் ஆணையத்திடம் விட்டுவிட்டு விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

* பேதுல் காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

பேருந்தில் பயணம் செய்த 36 பயணிகளும் காயமின்றி பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர் என்று காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். பேருந்தில் 6 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன அதில் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளது என்று கூறியுள்ளார்

The post மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் தீ விபத்து: 4 வாக்குப்பதிவு இயந்திரங்களும் தீயில் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Kola ,Multai ,Dinakaran ,
× RELATED ம.பி.யில் பேருந்தில் தீ : 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை